திங்கள், 27 ஏப்ரல், 2015

காவியத்தின்நாயகன் 3

தன் தமைக்கையின் கணவர் வந்தியதேவனை அழைத்து கொண்டு இளவரசர் அருள்மொழி தன்
தந்தை சுந்தர சோழர் கட்டிய சிறிய அரண்மனை இருக்கும் சிதம்பர கிழக்கு
பகுதியை நோக்கி நடக்க அரம்பித்தார், வெகு நாள்களுக்கு பிறகு இளவரசரை கண்ட
மகிழ்ச்சியில் சிதம்பர மக்கள் ஆரவார கோஷங்களை முழங்கி அருள்மொழியை
பின்தொடர்ந்து நடக்க அரம்பித்தனர், அவர்களுடன் நம்பிராஜன் நம்பியூம்,
பஞ்சவன்மகாதேவியும் சென்றனர், சேர அந்தனர்களை தவிர்த்து அனைவரும் செல்ல,
நடராஜன் ஆலயத்தின் வாயில் முன் இருந்த சகாதேவனை சுற்றி சேர அந்தனர்
சூழ்ந்துகொண்டனர்.

வயதான சேர அந்தனர் சகாதேவன் முன் வந்து சமஸ்கிருதத்தில் பேச
அரம்பித்தார், அந்தனர்களை தவிர வேறு யாருக்கு தெரிய கூடாது என்பதற்காக
சமஸ்கிருதத்தில் பேசுவது அந்தனர்களில் வாடிக்கையான செயல்களில்
ஒன்று,"சகாதேவா! எதற்காக இளவரசரை கண்டு நடுங்கிறாய்? இந்த சோழ தேசத்தை
தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கும் நம் தலைவர் ரவிதாசன் இருக்கும்
பொழுது, அருள்மொழியிடம் அமைதி காத்துபோவது சரியல்ல"

"பெரியவரே பொறுங்கள், நாம் அந்தனர்கள்!, எதையும் ஞானத்துடன்
செயல்படுவர்கள்! நாம், நம் தலைவர் ரவிதாசன் இந்த சோழ தேசத்து பிரம்மராயராக
(முதலமைச்சர்) இருக்கலாம், ஆனால் வந்து இருப்பது அருள்மொழிவர்மர், இளவரசர்
பட்டம் சூட்டப்பட்டவர், உத்தம சோழரிடம் அன்பை பெற்றவர், கடற்கொள்ளையர்களை அழித்து வங்கடலில் வணிகத்தை மேம்படுத்தியவர், சோழ தேசத்து மக்களின் அன்பை சம்பாதித்தவர், அவரிடம் கவனமாகவேசெயல்படவேண்டும், என்பதை சிந்தித்து பாருங்கள், நீங்களே  அறிவிர்கள்?"

சகாதேவனின் இளைய மகன் இந்திரன் தன் தந்தையிடம், "தந்தையே! புலியையே கொன்ற
இனம், நம் இனம். அருள்மொழி நம்மை எதிர்த்தால், அவன் தமையனை எமலோகம்
அனுப்பியது போல அவனையும் அனுப்பிவிடுவோம்." என்று கூறிமுடிப்பதற்குள்,
இந்திரன் கண்ணத்தில் பிளார் என்று அறைந்தான் சகாதேவன்  "முடனே! நாவை
அடக்கு, நீ பேசிய விடயம் சோழர்களில் செவியில் விழுந்தாள், நம் உயிரை
எடுத்துவிடுவார்கள்."

கண்ணத்தை தடவிகொண்டு, "நான் சமஸ்கிருதத்தில் தானே பேசினேன், நான்
பேசியது, நம்மை தவிர யாருக்கு தெரியபோகிறது."

"நாம் இருப்பது சோழ தேசம், கல்களுக்கு கூட செவி உண்டு, நாம் பேசும் உடல்
அசைவிலே உணர்ந்து விடக்கூடியவர்கள், அவர்களுக்கு மட்டும் அந்த ரகசியம்
தெரிந்தால், நம் உடலில் உயிர் இருக்காது" என்று தன் அதங்கத்தை சகாதேவன்
வெளிப்படுத்த, இவர்கள் பேசி கொண்டு இருப்பதை தூரத்தில் இருக்கும் பெரிய
அலமரத்தின் கிளைகள் அடர்த்தியில் மறைந்து இருக்கும் ஒரு இளைஞன்
கண்காணித்து கொண்டு இருந்தான்.

இளவரசர் வந்து இருப்பதை அறிந்து அரண்மனையில் உள்ள பணியாளர்கள் தடபுடலான
விருந்தை ஏற்பாடு செய்ய, பயண களைப்பில் இருந்த இளவரசர் அருள்மொழியும்,
வந்திய தேவரும் அவர்களுடன் வந்த வீரர்களுக்கும், அடிகளார் நம்பிராஜனும்
அமர்ந்து அறுசுவை உணவுகளை உண்டு தங்கள் பசியை தீர்த்து கொண்டனர், ஆனால்
வந்திய தேவர் காலையில் நடந்த சம்பவத்தால் வருத்ததுடன் இருப்பதை அறிந்து
அருள்மொழி பேச அரம்பித்தார்,"என்ன அன்பரே, உங்களுக்கு இன்னும் என் மீது உள்ள கோபம் தீர வில்லை போலும்?"

"உங்கள் மீது நான் எப்படி கோப பட முடியும்?" என்று சொல்லி வந்திய தேவர்
தன் முகத்தை திருப்பி கொள்ள,

"அன்பரே, நான் செய்கின்ற ஒவ்வொறு காரியத்திலும், ஓர் அர்த்தம் இருக்கும்,
நீங்கள் பழைய வந்திய தேவராக இருந்து இருந்தால், உணர்ந்து இருப்பீர்கள்,
என்று என் தமைக்கை கரம் பிடித்தீர்களோ? அன்றே உங்கள் இதயத்தை மட்டும்
அல்லாமல், ஞானத்தையும் இழந்துவிட்டீர்கள்."

"என் குந்தவை மீது குறை சொல்லாமல், உங்களால் இருக்க முடியாத அருள்மொழி?,
அவள் என் மனைவி மட்டும் அல்ல, எனது உடலை இயக்கும் உயீர்"

"ஆகா, அற்புதம், அனந்தம், என் மனம் குளிர்ந்து விட்டது"

"எதற்காக அனந்தப் படுகிறீர்கள் இளவரசே, உங்கள் தமைக்கை குந்தவை மீது
நீங்கள் வைத்து இருக்கும் பாசத்தை விட குறைவு தான் என் மனைவி மீது நான்
வைத்து இருக்கும் அன்பு, இதை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன்."

"அன்பரே, நான் அதற்காக அனந்தப்படவில்லை, தங்கள் இருவரும் இந்த சோழ
தேசத்தின் வளர்ச்சி மீது தான் காதல் கொண்டவர்கள், ஒரே கொள்கை உடையவராக
இருந்த காரணத்தாலே இனைந்தீர்கள், நான் மகிழ்ச்சி அடைய காரணம், தாங்கள்
என் பெயர் சொல்லி அழைத்தாலே அனந்தப்பட்டேன், தாங்கள் என் பெயர் சொல்லி
அழைத்து வெகு காலம் ஆகிவிட்டது.நான் இந்த வையகத்தில் அதிகம் நேசிப்பது, என் இனிய நண்பரான தங்களையும், என் உயிரினும் மேலான என் தமைக்கையான குந்தவையை தான், நான் இந்த வையகத்திற்கே அரசனாக ஆனாலும், தங்களுக்கு என்றுமே அருள்மொழி தான்." என்று கூறி வந்திய தேவரை கட்டி தழுவ இருவரது கண்களில் கண்ணீர் வடிய, இவர்களது அன்பையும், நட்பையும் கண்டு சிதம்பர மக்கள் மெய்மறந்து பார்த்தனர்.

"தங்கள் நட்பால் வானவர் குலமே பெருமை அடைந்துள்ளது, என் இனிய நண்பரே
எதற்காக சேர அந்தனர்களை தண்டிக்காமல் வீட்டீர்கள், சிவலோகம் பதவி அடைந்த
நான்கு அடிகளாரை எப்படி அழைத்து வரமுடியும்?"

"அன்பரே! காரியத்திலே கண்ணாக இருக்கீறீர்களே? சேர அந்தனர்களிடம் மிகவும்
கவணமாகவே இருக்க வேண்டும் என்பதை தாங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம்
இல்லை, பிரம்மராயராக(முதன்மை அமைச்சராக) இருக்கும் ரவிதாசனை பற்றி என்னை
விட உங்களுக்கே நன்கு தெரியும்,

முயன்றால் முடியாது என்கிற வார்த்தைகளே கிடையாது. சைவ மதத்தின் புகழை
பரப்பிய அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், திருவாசகருக்கு மரணமே என்றுமே
கிடையாது." என்று கூறி வந்திய தேவரின் காதில் அருள்மொழி ரகசியமாக சில
வார்த்தைகள் கூற வந்திய தேவரின் முகம் அனந்ததில் முகம் மலர்ந்தது.

திங்கள், 20 ஏப்ரல், 2015

காவியத்தின்நாயகன் 2

அதிகாலை நேரத்தில் சிதம்பரத்தின்  மேற்கே  இருக்கும் காஞ்சி செல்லும்
பாதையில் ஒரு சிறிய படை புயலை போன்று வேகமாக சிதம்பரம் நோக்கி
வந்துகொண்டு இருந்தது, அந்த படையின் நடுநாயகமாக ஒரு சாம்பலும் வென்மையும்
கலந்த உயர்ரக அரபு நாட்டு குதிரையில் வரும் வீரன் தான், இந்த காவியத்தின்
நாயகன், ஆம் பிற்காலத்தில் தென் இந்தியாவை ஆண்ட ஸ்ரீ ராஜராஜ சோழன் என
வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்ட போகும் அருள்மொழிவர்மர் தான்
அக்குதிரை செலுத்தி கொண்டு இருந்தார்.

சுந்திர சோழரின் மகனான அருள்மொழிவர்மருக்கு, தன் தந்தைக்கு பிறகு கிடைக்க
இருந்த சோழ தேசத்து அரியணையை தன் சிறிய தந்தை உத்தம சோழருக்கு வீட்டு
கொடுத்து 14 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, மாமன்னர் உத்தமர் சோழரின்
கட்டளைக்கு கீழ் பணிந்து சோழ தேசத்தின் எல்லைகளை காக்கும் பொறுப்பை
கவணித்து கொண்டு, தனக்கு உள்ள இளவரசர் என்கிற பதவியின் அதிகாரத்தை
பயண்படுத்தி சோழ மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து மக்கள் மத்தியில்
மன்னராக திகழ்ந்தார் அருள்மொழி வர்மர்,
சோழ தேசத்தின் அரசனாக இல்லாவிட்டாலும், தனக்கு என்று ஒரு சிறிய
ராஜங்கத்தையே உருவாக்கி வைத்து இருந்தார் அருள்மொழி. அதில் ஒற்றர் படை
மூலம் சோழ தேசத்தை கண்காணித்து, போர் பாசறை மூலம் இளைஞர்களுக்கு போர்
பயிற்சி அளித்து கொண்டும்,  மக்களின் தேவையை கவணிக்க ஒரு துறையை
உருவாக்கி கொண்ட சோழ தேச மக்களிடம் தனி செல்வாக்கு பெற்றவராகவே
விளங்கிவிட்டார், காரணம் உத்தமர் சோழரின் அன்பிற்கு பாத்திரமானவர்
என்பதால் அருள்மொழியால் இது முடிந்தது.

காஞ்சியின் எல்லை பகுதியை பலப்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடு செய்துவிட்டு,
சிதம்பரம் வழியாக தச்சை செல்வதற்காக பயணிக்க அரம்பித்தார்.

அருள்மொழி வர்மருடன் சரிசமமாக கூட வரும் மாவீரரை பற்றி அறிமுகம்
உங்களுக்கு தேவை இல்லை(நீங்கள் பொன்னியன் செல்வன் நாவல் படித்து
இருந்தால்.) அருள்மொழிவர்மரின் அக்கா குந்தவைப்பிராட்டியின் கணவர்,
வல்லவராயன் வந்திய தேவன் தான் அது. சுந்திர சோழர் மறைவிற்கு பிறகு
ஏற்பட்ட குழப்பமான காலகட்டத்தில் தனது சாகசத்தால் தீர்வை ஏற்படுத்தி சோழ
தேசம் தற்பொழுது நிம்மதியூடன் வாழ காரணமானவர் தான் இந்த வந்திய தேவன்,
இவர்கள் இருவருடன் சிறிய மெய்காப்பாளர்கள் படையும் பின்தொடர்ந்து வந்தது.
சித்ம்பர எல்லையை நெருங்கிய உடன். அருள்மொழிவர்மர் வந்தியதேவருடன் பேச
அரம்பித்தார்.
"அன்பரே சிதம்பரத்தை நெருங்கிவிட்டோம், நடராஜனை தரிசித்து விட்டு நம்
பணியை கவணிக்கலாமா?"
"அப்படியே செய்யலாம் இளவரசே, கரும்பு சாப்பிடால் கச்காவா செய்யும்."

சிறிய புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, "அன்பரே என் சோகமாக இருக்கீங்க, என்
தமைக்கையை  வெகு நாள்களாக பிரிந்து வந்தாலா?"

"அப்படி எல்லாம் இல்லை இளவரசே!, குந்தவையை வீட்டு அணு அளவும் பிரிந்தது
இல்லை, அவள் என் இருதயத்தில் குடிஇருக்கும் பொழுது எப்படி பிரிவேன், என்
கவலை எல்லாம் சோழ தேசத்தை பற்றியும், உங்களை பற்றியும் தான் என் கவலை."

"இளவரசே மறந்துவீட்டீர்களா! தங்கள் தமைக்கையின் ஆசையை, தங்களை சோழ
தேசத்தின் அரியணை ஏற்றி வையகம் முழுவதும் தாங்கள் ஆள வேண்டும் என்பதே
அவளது ஆசை, அவளது கணவனான நான், என்று என் மனைவியின் ஆசை நிறைவேற்றுவேன்
என்கிற கவலை, வருங்கால சோழ தேசத்து அரசரை பெயர் சொல்லி அழைப்பது
முறையல்லவே, அதனால் தான் தங்கள் பெயர் சொல்லி அழைக்கவில்லை"

"நான் இவ்வையகத்தையே ஆண்டாலும், நீங்கள் என்றும் என் அன்பிற்கு
பாத்திரமானவர், தாங்கள் என்னை பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறேன்,
நான் சோழ தேசத்தின் அரியனை ஏறுவது இயலாத காரியம், உத்தம சோழரின் மகன்
இருக்கும் பொழுது நான் எப்படி அரியனை ஏற முடியும்? சோழ தேசத்தின்
ஊழியனாகவே இருந்து மக்கள் பணி செய்வதிலே தற்பொழுது என் கவனம் இருக்கிறது"

"நாற்பதை நெருங்கிவிட்டீர், இன்னும் காலம் இருக்கிறது, தாங்கள்
விரும்பினால், இன்றே ஆட்சிமாற்றத்திற்கான காரியங்கள் செயல்படுத்த
அரம்பித்துவிடுவேன். தற்பொழுது என் ரகசிய படையில் நாற்பதாயிரம் இளம்
வீரர்கள் தங்கள் கீழ் போர் புரிய சித்தமாக உள்ளனர். தாங்கள் விரும்பினால்
இன்றே அரம்பித்துவிடுவேன்."

"வேண்டாம் அன்பரே, என் தமையன் ஆளாத இந்த தேசத்தை நான் ஆள வேண்டுமா?
வாருங்கள் நாம் இருவரும் ஆலயத்தில் ஈசனை தரிசித்துவிட்டு வருவோம்,"
தலைமை மெய்காப்பாளரின் சைகை மூலம் அழைத்து,"தாங்கள் பயணத்திற்கு தேவையான
ஏற்பாடை தயார் செய்துவிட்டு சத்திரற்கு வந்துவிடுங்கள். நாங்கள்
ஆலயத்திற்கு சென்று வந்துவிடுகிறோம்." என்று கூறிவிட்டு அருள்மொழி,
வந்தியதேவருடன் சிதம்பர நடராஜன் ஆலயத்தை நோக்கி தங்கள் புரவியை வேங்கை புலியை போன்று வேகமாக செலுத்த அரம்பித்தனர்.


சில நிமிடங்களிலே சிதம்பர மேற்கு வாயிலை நிழைந்த இருவரும் நடராஜன்
ஆலயத்தை நோக்கி தங்கள் புரவியை செலுத்தினர்.

"இளவரேசு ஆலயத்தில் வாசலில் என் மக்கள் கூட்டமாக நிற்கிறார்கள், நடராஜன்
ஆலயத்தின் வாயலில் என் இவ்வளவு கூட்டம், சேர அந்தனர்களுக்கு நடராஜன்
ஆலயத்தில் என்ன வேலை."

"தெரியவில்லை அன்பரே."
இவர்கள் இருவரது வருகையை கண்ட கும்பலாக வேடிக்கை பார்த்து கொண்டு
இருந்தவர் வழிவிட்டனர். அங்கு பஞ்சவன்மகாதேவியை நம்பிராஜன் நம்பி இருந்த
கோலத்தை பார்த்த வந்திய தேவரின் மனம் கோதித்தது, புரவியை விட்டு கீழே
குதித்த வந்திய தேவர் தன் உறை வாளை எடுத்தார் அதை கண்டு. பயந்து போய்
இருந்த சேர அந்ததனர்கள் அருகில் வந்து தன் போர் வாளை காட்டி, "யார்
செய்தது இந்த அவசெயலை, சைவம் தளைத்து வாழும் இந்த சோழ தேசத்தில், சைவ
மதத்தை பரப்பும் இப்பெரியவரை காயப்படுத்தியவன் எவன்டா, வீரனாய் இருந்தால்
என்னிடம் மோதி பார்," என்று கர்ஜிக்க

அருள்மொழியோ தன் புரவியை வீட்டு மெதுவாக இறங்கி தனது  உடம்பில் போற்றி
இருந்த செந்நிற போர்வையை சிறிது கிளத்து அந்த துணியை கொண்டு நம்பிராஜன்
நம்பியின் நெற்றியில் இருந்து வெளியான குருதியை துடைத்து, அதை கொண்டு
கட்டு போட்டு விட்டு சந்தமான குரலில், "பெரியவரே தங்களுக்கு என்னுடைய
பணிவான வணக்கம், தங்கள் நெற்றியில் ஏற்ப்பட்ட காயத்திற்கு யார் காரணம்?
இந்த பெண்னின் நிகழ்ந்தது என்ன?" என்று கூறி பஞ்சவன்மகாதேவியை முதன்
முதலாக அவளது முகத்தை பார்த்த போது, அருள்மொழிக்கு, அவனை அறியாமல்
பஞ்சவன்தேவியின் அழகு அவனது மனதை எதோ செய்தது,அவளிடம் பல ஆயிரம் வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தது போல உணர்வு அவனுக்கு ஏற்பட்டது, தன் இதயத்தை முதன் முதலாக பஞ்சவன் தேவியிடம் கைபற்றியதை உணர்ந்தான், தன் தமைக்காக அவளது தோழி வான்மகாதேவியை(வானதி) மணந்தையும், அவள் மூலம் முன்று குழந்தைகளுக்கள் உள்ளதையும் மறக்கடிக்க செய்தது விட்டது, இதே நிலை பஞ்சவன் தேவிக்கும் ஏற்பட்டது.

"எங்கள் சுந்தர சோழரின்  தவபுதல்வனே, பொன்னியன் செல்வனே, எங்களது அபிமான
"என்னிடம் எதற்கு மண்ணிப்பு கேட்கிறீர்கள், மண்ணிப்பு கேட்க வேண்டியது

இளவரசே, நம் ஈசனை துதிபாடிய திருஞான சம்பந்தரின் திருக்கடைக்காப்பு,
திருநாவுக்கரசரின் தேவாரம், சுந்தரின் திருப்பாட்டு, மாணிக்கவாசகரின்
திருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவையார் ஆகிய புன்னிய நூல்கள் இன்று
நடராஜன் ஆலயத்தில் உள்ள பொக்கிஷ அறையில் உள்ளது, அதை மீட்டு அதை
தொகுத்து, நம் சோழ தேசத்தில் உள்ள எல்லா சிவாலயங்களை அப்பாடல்களை பாட
வேண்டும் என்கிற ஆசையால், அதை மீட்க வந்தேன், அதை இங்கு உள்ள சேர
அந்தனர்கள் அதை தடுத்தார்கள் என்னை காயப்படுத்தி விட்டார்கள், என்னுடன்
போராடிய என் ஈசனின் மகளையும் அவமான படுத்திவிட்டார்கள் தகாத
வார்த்தைகளால். இந்த நம்பிராஜன் நம்பியின் ஆசையை தாங்கள் தான் நிறைவேற்ற
வேண்டும்" என்று நம்பிராஜன் நம்பி கூற இதை கேட்ட வந்திய தேவனின் கண்கள்
சிவந்தது.

அருள்மொழி நேராக வந்து,"ஆனையிடுங்கள் இளவரசே அவன் தலையை நடராஜனின் காலில்
சாய்க்கிறேன்"

"அமைதியாக இருங்கள் அன்பரே, நான் பார்த்து கொள்கிறேன்" என்று கூறி
நம்பிராஜனை கட்டி அனைத்து விட்டு, அவரை நோக்கி,"மகத்தான காரியத்தை
செய்துவிட்டீர்கள் நம்பிராஜனே, தாங்கள் காரியம் வெற்றி பெரும், அதற்கு
உறுதுணையாக நான் இருப்பேன்" என்று கூற நம்பிராஜன் நம்பிக்கு மகிழ்ச்சி
கடலுக்கே சென்றுவிட்டார்.

நம்மை எப்படி அருள்மொழி தண்டிப்பார் என்று கலக்கி போய் இருந்த சேர
அந்தனர், அருள்மொழி அமைதியாக இருப்பதை கண்டு பேசமுடியாமல் தலை குனிந்து
நின்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்த சிதம்பர ஆலயங்களை நிர்வாகிக்கும் சகாதேவன்
அய்யங்கார் ஆங்கு வேகமாக வந்து நடந்த சம்பவங்களுக்கு மண்ணிப்பு கேட்க.

இந்த பெரியவரிடமும், அந்த பெண்ணிடமும் தான். உங்கள் உறவுகள் செய்ததற்கு
நீங்கள் வெட்கபடவேண்டும்."

"ஆலயத்தின் பொக்கிஷ அறையில் இருக்கும், தெய்விக நூல்களை நம்பிராஜன்
நம்பியுடன் ஒப்படையுங்கள், சோழ தேசத்து இளவரசனின் உத்திரவு, வேண்டுமனால்
சோழ தேசத்து அரசரான உத்தம சோழரின் உத்தரவையும் வாங்கி தருகிறேன், அவரிடம்
இன்றே கொடுத்துவிடுங்கள்." என்று கம்பிர குரலில் கர்ஜிக்க.

அதை கேட்ட சகாதேவனுக்கு கதிகலங்க, சேர அந்தனர்கள் மத்தியில் சிலசிலப்பு
ஏற்பபட்டது,
இளவரசர் என்பதால் அவர் உத்தரவை மீற முடியாதே என்பதால்
சகாதேவன் பணிவாக தன் வார்த்தை பேச அரம்பித்தார்.
"மண்ணிக்கவும் இளவரசே, தாங்கள் சொன்ன காரியத்தை எங்களால் செய்ய முடியாது,
நீங்கள் கேட்கும் புனித நூல்களை திருநாவுகரசர், அப்பர், சுந்தர்
மாணிக்கவாசகர், ஒரு சேர்ந்து வந்தால் மட்டுமே, அவர்களிடம் மட்டுமே இந்த
புனித நூல்களை கொடுக்கமுடியும், தாங்கள் அந்த நால்வரை அழைத்து வாருங்கள்
பொக்கிஷ அறையின் சாவியை நாங்கள் தருகிறோம்" என்று கூறி ஏளனமாக
அருள்மொழியை பார்க்க.

வந்தியதேவருக்கோ அப்பதிலை கேட்டு சினம் உண்டாகி,"அந்த நால்வரும் எப்படி
வருவார்கள், சிவலோகம் சென்றவர்கள் வருவது எப்படி? இப்படி குதர்கமாக
பேசினால், உங்கள் நாவை இல்லாமல் செய்துவிடுவேன்."

"அன்பரே அமைதி காணுங்கள், இன்றே அந்த நான்கு அடிகளார்களை நாம் அழைத்து
வருவோம், புனித நூலை மீட்போம்" என்று கூறவிட்டு.

சேர அந்தனர்கள் மத்தியில் தன் கம்பிர குரலின்"சூரியன் வான் மத்தியில்
வருவதற்கு முன்பே, நீங்கள் கேட்ட அந்த நால்வரையும் அழைத்து வருகிறேன்,
பெக்கிஷ அறையின் சாவியை எடுத்து வையுங்கள். அன்பரே வாருங்கள் நாம்
அழைத்து வருவோம்." என்று கூறி வந்திய தேவரின் தோள் மேல் கை போட்டு
புரவியை நோக்கி நடை போட்டார்கள்.

காத்து இருங்கள் அடுத்த திங்கள் வரை.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

காவியத்தின்நாயகன் 1

இருபுறமும் சூழ்ந்து நிற்கும் தில்லை மரங்களுக்கு இடையே அமைந்திருந்த ஒற்றையடிப் பாதையில், செந்நிறப் பட்டாடை அணிந்த அழகிய இளம்பெண் ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள். ஆண் மயில் தனது தோகையை விரித்துக்கொண்டு கம்பீரமாக நடந்து வருவதைப் போல, அவளது நடை கம்பீரமாக இருந்தது. அவளது கால்களில் அணிந்திருந்த சலங்கையின் ஒலி, அந்தக் காட்டுப் பாதை முழுவதும் இனிமையான இசையைப் போல ஒலித்தது.

அவளது முகம் முழுநிலவைப் போலப் பிரகாசித்தது. வானுலகில் இருந்து தேவலோக ரம்பையே பூமிக்கு வந்துவிட்டாளோ என்று தோன்றும் அளவுக்கு அவளது அழகு இருந்தது. அவளது அழகைக் கண்டு பித்தாகாதவர்கள் தில்லை நகரிலேயே இல்லை.


தில்லையில் நடராஜப் பெருமான் நடனமாடும் அந்தச் சன்னிதானத்தில், இவள் ஆடும் பரதநாட்டியத்தைப் பார்த்தால் கைலாயமே அதிரும் போலத் தோன்றும். பஞ்சபூதங்களையும் தனது அபிநயத்தின் மூலம் ஆளும் வல்லமை அவளுக்கு இருப்பது போலத் தோன்றும்.


அதனால்தான் என்னவோ, இவள் பிறந்தபோதே இவளுக்கு பஞ்சவன்மகாதேவி என்று பெயர் சூட்டினார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.


அரச குலத்தில் பிறந்திருக்க வேண்டியவள். ஆனால், தலைவிதியால் சாதாரண குதிரைக் காவலாளியின் மகளாகப் பிறந்தாள். இன்று தேவராட்டியாக்கப்பட்டிருக்கிறாள். சேர அந்தணர்களின் சூழ்ச்சியால் அவளது வாழ்க்கை வேறு பாதைக்குத் திரும்பியது.


திருநள்ளாறு நம்பிராஜன் மட்டும் இவளைச் சேர அந்தணர்களிடமிருந்து காப்பாற்றி, தில்லை நடராஜனுக்குச் சேவை செய்யும் வாழ்க்கையை அளிக்காமல் இருந்திருந்தால், இவளது வாழ்க்கை என்னவாகியிருக்கும்?

தில்லை நடராஜன் முன் அதிகாலையில் தினமும் தனது நாட்டியத்தை அரங்கேற்றுவதுதான் இவளது பணி. ஆனால், என்றும் போல இன்றைய விடியலும் சாதாரண விடியலாக இருக்கப்போவதில்லை என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. காலத்தையே மாற்றப்போகும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு தானே காரணமாகப் போகிறோம் என்பதையும் அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

சோழ தேசத்தின் குலவிளக்கான இளவரசி குந்தவைப் பிராட்டிக்கு இணையாகத் தானும் ஒருநாள் மாறப்போகிறோம் என்பதையும் அவள் கனவுகூட கண்டிருக்கமாட்டாள்.

இவளது வாழ்க்கையில் அப்படி என்ன மாற்றம் ஏற்பட்டது?

அதைத் தொடர்ந்து பார்ப்போம்.

கடல் கடந்த பல தேசங்களை வென்ற மாமன்னன் ராஜேந்திர சோழன், இந்தத் தேவராட்டிக்காகவே ஒரு கோயில் கட்டினான் என்று சொல்லப்படும் அளவுக்கு, அவளது வாழ்க்கை வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெறப்போகிறது.


“திருவாசகம் கேட்டாலே உருகாத நெஞ்சமும் உருகும். அதை நம்பிராஜன் பாடினால், ஆஹா... என்ன அற்புதம்! அவரது நாவில் அரசரே குடிகொண்டிருப்பது போல இருக்கும்.

இன்று அவரிடம் தேவாரப் பாடல்களைக் கேட்டு என் உள்ளம் மகிழ வேண்டும். என் கவலைகளை எல்லாம் மறக்க வேண்டும்.”

என்று எண்ணியவாறே, மார்கழிக் குளிரில் நடுங்கிக்கொண்டு சிதம்பரம் ஆலயத்தை நோக்கி வேகமாக நடந்து சென்றாள் பஞ்சவன்மகாதேவி.

அரசமரத்தின் அருகில் அவளுக்காகக் காத்திருந்த கயல்விழி, அவளைப் பார்த்ததும் கோபத்துடன் பேசத் தொடங்கினாள்.

“ஏய் பஞ்சவன்தேவி! உனக்காக எவ்வளவு நேரம் அரசமரத்தடியில் காத்திருப்பது? ஏன் இவ்வளவு காலதாமதம்? நம்பிராஜன் அடிகளார் இன்று நடராஜன் முன் தேவாரம் பாட வருகிறார் என்பது தெரிந்துமா இவ்வளவு தாமதமாக வந்தாய்?”

“பேசுவதற்கு நேரமில்லை கயல். வேகமாக வா!”

“உனக்காகக் காத்திருந்தது நான். தாமதமாக வந்தவள் நீ. என்னையே குறை சொல்கிறாயா?”

என்று கயல்விழி இரு கைகளையும் கட்டிக்கொண்டு கோபமாகக் கேட்டாள்.

அவளது கைகளைப் பற்றிக்கொண்ட பஞ்சவன்மகாதேவி, அவளை இழுத்துக்கொண்டு வேகமாக நடராஜன் கோயிலை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

சரியாகப் பூஜை ஆரம்பிக்கும் நேரத்தில் இருவரும் சன்னிதானத்திற்குள் சென்றுவிட்டனர்.

அலங்கரிக்கப்பட்டிருந்த நடராஜப் பெருமானின் சன்னிதானம் திறக்கப்பட்டது. இருவரும் இறைவனை வணங்கினர். பின்னர், தனது தோழியுடன் பஞ்சவன்மகாதேவி நாட்டியத்தை அரங்கேற்றினாள்.

நாட்டியம் முடிந்ததும் இறைவனைத் தொழுதுவிட்டு, காவி உடை அணிந்து வயதான முனிவரைப் போன்ற தோற்றத்துடன் அமர்ந்திருந்த நம்பிராஜன் நம்பியை வணங்கி நின்றாள்.

“மகளே, உனக்கு என்றுமே ஈசன் துணை நிற்பாராக! எப்படி இருக்கிறாய் மகளே?”

“ஐயனே, தங்களுடைய ஆசீர்வாதத்தால் நான் மிகவும் நலமாக இருக்கிறேன். தாங்கள்தானே எனக்கு வாழ்வு அளித்தவர்கள்?”

“அவளுக்கு நீங்கள் வாழ்வு அளித்தீர்கள். ஆனால், அவள் என்னிடம் அதிகாரம் செய்து என்னையே அடிமையாக்கிவிட்டாள்!”

என்று வழக்கமான குறும்புச் சிரிப்புடன் தனது அவலத்தை கயல்விழி கூறினாள்.

அவளைப் பார்த்து கண்டிக்கும் பார்வையுடன் அமைதியாக இருக்கும்படி சைகை செய்த பஞ்சவன்மகாதேவி, மீண்டும் பரதத்தின் அபிநயத்தைப் பிடிக்கத் தொடங்கினாள்.

இவர்கள் இருவரின் செயலையும் ரசித்தபடி சிரித்துக்கொண்டிருந்த நம்பிராஜன் நம்பி, கயல்விழியை நோக்கி,

“மகளே, உன்னைப் பஞ்சவன்மகாதேவி ஏவல் புரியச் செய்கிறாள் என்று வருத்தப்படுகிறாயா? ஒரு காலம் வரும். அப்போது இவள் நம்மிடம் ஏவல் புரிய மாட்டாளா என்று நீயே ஏங்கும் காலம் வரும்.”

என்றார்.

அதைக் கேட்ட கயல்விழி வயிறு குலுங்கச் சிரித்தாள்.

“இவளது கட்டளைக்காக விழிமேல் விழி வைத்துக் காத்திருக்க வேண்டுமா? இவள் ஒன்றும் சோழ தேசத்து இளவரசி அல்லவே!”

என்று ஏளனமாகக் கூறினாள்.

“ஐயனே, இவள் குறும்புக்காரி. துடுக்குத்தனமாகப் பேசியதற்கு மன்னிக்கவும். இவள் எப்போதும் இப்படித்தான். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதே தெரியாது.”

என்று பஞ்சவன்மகாதேவி கூறினாள்.

“மகளே, அவள் சொல்வதில் தவறே இல்லை.”

என்று கூறிவிட்டு கயல்விழியை நோக்கினார் நம்பிராஜன் நம்பி.

“மகளே கயல்விழி, பஞ்சவன்மகாதேவியின் திறமைக்கு அவள் சோழ தேசத்தின் அரசியாகவே ஆகலாம். இவளை மணக்க சோழ தேசத்து அரசன்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.”

“என்னது? நம் மன்னர் மதுராந்தக தேவர் இவளை மணக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமா? முதிய பருவத்தில் இருக்கும் நம் மன்னர் இவளை மணக்க விரும்புவாரா?”

என்று கயல்விழி குறும்புடன் கேட்டாள்.

பஞ்சவன்மகாதேவி அவளைச் சினத்துடன் பார்த்தாள்.

“ஏய் கயல்! உன் திருவாயை கொஞ்ச நேரம் திறக்காதே!”

“சரி, சரி. உண்மையைச் சொன்னால் உனக்குக் கோபம்தான் வரும். இனிமேல் என் திருவாயைத் திறக்கவில்லை. சரியா?”

என்று கயல்விழி சிரித்தாள்.

“ஐயனே, தங்களிடம் இருந்து திருவாசகம் கேட்க ஆவலாக வந்தேன். ஆனால், இவளால் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். தங்கள் குரல் அமுதத்தை எங்கள் செவிகள் பருக ஆவலாக உள்ளன. தாங்கள் எங்களுக்காகப் பாடுவீர்களா?”

என்று பஞ்சவன்மகாதேவி கேட்டாள்.

“என்ன கோரிக்கை வைக்கிறாள்! நீயே சோழ அரசியாகப் போகிறாயே; கட்டளையிடலாமே!”

என்று மீண்டும் தனது குறும்புப் பேச்சைத் தொடங்கினாள் கயல்விழி.

அதை ஆமோதிப்பது போல நம்பிராஜன் நம்பி சிரித்தார்.

“மகளே, உன் தோழி கூறியது போல, நீ எனக்குக் கட்டளையே இட்டிருக்கலாம். மகளே, உனக்காகப் பாடுகிறேன்.”

என்று கூறிவிட்டு பாடத் தொடங்கினார்.

ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு
ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான்
மருகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி
என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!

பாடல் முடிந்ததும் பஞ்சவன்மகாதேவி கண்களை மூடி சில நொடிகள் அந்த இசையில் திளைத்தாள்.

“ஆகா! என்ன இனிமையான பாடல்! என்ன இனிமையான குரல்! இந்தப் பாடலை வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலத் தோன்றுகிறது.

ஐயனே, தில்லை நடராஜனுக்காகத் திருவாசகத்திலிருந்து ஒரு பாடலை எங்கள் செவிகள் கேட்கத் தவம் செய்கின்றன. தாங்கள் எங்களுக்கு அந்த வரத்தைத் தர வேண்டும்.”

“மகளே! நான் வாழ்வதும் பாடுவதும் அந்தத் தில்லை நடராஜனுக்காகத்தான். என் ஈசனுக்காகத் திருவாசகத்திலிருந்து பாடுகிறேன். கேள், மகளே!”

என்று கூறிவிட்டு மீண்டும் பாடத் தொடங்கினார்.

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,
எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,
மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,
துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,
என்னுடை இருளை ஏறத் துரந்தும்,
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்...

பாடல் முடிந்ததும் பஞ்சவன்மகாதேவி நெகிழ்ச்சியுடன் பேசினாள்.

“ஐயனே! தங்கள் நாவில் சரஸ்வதியே குடிகொண்டிருக்கிறாள். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சிவனடியார்கள் பாடிய அனைத்து பாடல்களையும் தாங்கள் பாடுவீர்களா?”

“மகளே, எல்லாப் பாடல்களும் எனக்குத் தெரியாது. கொஞ்சம் மட்டுமே தெரியும். நான் இன்று சிதம்பரம் வந்ததே அதற்காகத்தான்.

இங்கு கோயிலுக்குள் சிறைபடுத்தப்பட்டிருக்கும் நான்கு சிவனடியார்கள் பாடிய ஓலைச்சுவடிகளை மீட்பதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

அந்த நூல்களைத் தொகுத்து, சோழ தேசம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் அவற்றை இசைக்கச் செய்வதே எனது கனவு.”

என்றார் நம்பிராஜன் நம்பி.

“ஐயனே, தாங்கள் எடுத்திருக்கும் காரியம் மிகவும் உயர்ந்தது. ஆனால், இதை இங்குள்ள சேர அந்தணர்கள் செய்ய விடுவார்களா? அதிகாரம் அவர்களிடம்தானே இருக்கிறது. அவர்கள் அறையின் சாவியைக் கொடுப்பார்களா?”

என்று பஞ்சவன்மகாதேவி கவலையுடன் கேட்டாள்.

“மகளே, இது சோழ தேசம். சைவத்தை வளர்க்கும் பூமி. நமக்கு ஈசன் துணை உண்டு. நாம் நம் தெய்வீக நூல்களை மீட்டே ஆக வேண்டும்.

சாவி எதற்கு? கடப்பாரை போதாதா?

நீயும் என்னுடன் வருகிறாயா?”

என்று நம்பிராஜன் நம்பி கேட்டார்.

“ஐயனே, தங்களுக்காக உதிரம் சிந்தவும், உயிர் கொடுக்கவும் நான் காத்திருக்கிறேன். நீங்கள் அழைப்பது இறைப்பணிக்காக. நான் வராமல் இருப்பேனா?”

என்று பெண் சிங்கத்தைப் போலக் கர்ஜித்தாள் பஞ்சவன்மகாதேவி.

இருவரின் உரையாடலைக் கேட்ட கயல்விழி மிரண்டு போனாள். உடனே வேறு ஒரு காரணத்தைக் கூறிவிட்டு அங்கிருந்து மெதுவாக நழுவிச் சென்றாள்.


நம்பிராஜன் நம்பியுடன் சேர்ந்து சிதம்பரம் ஆலயத்தின் பின்புறம் இருந்த கருவூலத்தை நோக்கிப் பஞ்சவன்மகாதேவி சென்றாள்.

அங்கு சென்றதும் கதவுகளில் இருந்த பூட்டுகளை நம்பிராஜன் நம்பி கற்களைக் கொண்டு உடைக்கத் தொடங்கினார்.

இந்தச் செய்தி சேர அந்தணர்களுக்குத் தெரியவந்தது.

சினம் கொண்ட அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

நம்பிராஜன் நம்பி கடுமையாகப் போராடி பூட்டை உடைத்துக்கொண்டிருந்த நேரத்தில், கோவிந்தராஜன் என்ற சேர அந்தணர் தனது முழு வலிமையையும் பயன்படுத்தி நம்பிராஜன் நம்பியைத் தள்ளிவிட்டான்.

அருகிலிருந்த கூழாங்கற்கள் மீது அவரது நெற்றி மோதி, முகம் முழுவதும் குருதி வழிந்தது. வலியால் துடித்தார் நம்பிராஜன் நம்பி.

அதைக் கண்ட பஞ்சவன்மகாதேவி ஆவேசமாகச் சபித்தாள்.

“சிவனடியாரை அடித்த நீங்கள் ஒருபோதும் கைலாயம் செல்லமாட்டீர்கள்!”

அதைக் கேட்ட சேர அந்தணர்களில் ஒருவர் ஏளனமாகச் சிரித்தார்.

“கவலைப்படாதே நாட்டியக்காரியே! நாங்கள் வைகுண்டம் செல்வோமே தவிர, கைலாயம் செல்லவே மாட்டோம். வந்தாரை வாழ வைக்கும் வைகுண்டம் இருக்கும்போது கைலாயம் எதற்கு?”

என்றான்.

அப்போது, பஞ்சவன்மகாதேவியைப் பலமுறை அடையத் துடித்துக் கொண்டிருந்த சிதம்பரத்தை நிர்வகிக்கும் சகாதேவனின் இளைய மகன் தனது ஆபாசமான பேச்சைத் தொடங்கினான்.

“பஞ்சவன்மகாதேவியே! ஏன் இப்படிப் பஞ்சணைத் தேவியாக இருக்கிறாய்? ஈசனுடன் நாட்டியம் ஆடி என்ன இன்பம் கண்டாய்? என் முன் உன் நாட்டியத்தை அரங்கேற்று. நான் தரும் இன்பத்தை அனுபவித்து அகமகிழ்வாய்.”

அந்த வார்த்தைகளைக் கேட்ட பஞ்சவன்மகாதேவி அதிர்ச்சியில் நடுங்கினாள்.

“சிவ சிவா! ஈசா! இது என்ன சோதனை? உன் சன்னிதானத்திலேயே இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்க வேண்டுமா?”

என்று கண்ணீர் மல்க அழுதாள்.

இதைக் கண்ட நம்பிராஜன் நம்பி கோபத்துடன் கூறினார்:

“நீங்கள் செய்கின்ற இந்தக் காரியத்தை நீங்கள் வணங்கும் பெருமாளே பொறுத்துக்கொள்ள மாட்டார். ஒரு பெண்ணிடம் பேசக்கூடிய வார்த்தைகளா இவை?”

“கிருஷ்ண அவதாரத்தில் எங்கள் பெருமாள் விளையாடிய விளையாட்டைத்தானே நானும் விளையாடுகிறேன்!”

என்று அவன் திமிருடன் பதிலளித்தான்.

“அவர் தெய்வம். நீ தெய்வமா?

நீ செய்கின்ற இந்தக் காரியத்தை எங்கள் சோழ மன்னர் அறிந்தால், அவரது தண்டனையிலிருந்து நீ தப்பவே முடியாது!”

என்று நம்பிராஜன் நம்பி எச்சரித்தார்.

அதைக் கேட்ட சேர அந்தணர்களில் ஒருவர் கேலியாகச் சிரித்தான்.

“புலியைக் கொன்ற இனமடா நாங்கள்! இந்தக் கிழட்டுப் புலி எங்களை என்ன செய்துவிடும்?”

என்று கூறிவிட்டு, பஞ்சவன்மகாதேவியையும் நம்பிராஜன் நம்பியையும் தரதரவென இழுத்துக்கொண்டு ஆலயத்திற்கு வெளியே கொண்டு வந்தனர்.

அவர்கள் பஞ்சவன்மகாதேவியை இழுத்துச் சென்றபோது, அவளது ஆடைகள் கிழிந்தன.

அதைக் கண்ட நம்பிராஜன் நம்பி உடனே தனது காவி நிறப் போர்வையை அவள்மீது போர்த்திவிட்டார்.

பின்னர் உரத்த குரலில் கூறினார்:

“நீங்கள் இந்தப் பெண்ணிடம் செய்த இழிவான செயலுக்காக அந்த ஈசனே உங்களைத் தண்டிக்க வருவார்!”

“எங்கே வரச் சொல்லுங்கள்! அந்த ஈசனை ஒரு கை பார்த்துவிடுவோம்!”

என்று சேர அந்தணன் ஆணவத்துடன் பதிலளித்தான்.

அந்த நேரத்தில்தான்...

சிதம்பர சிவாலயத்தை நோக்கி புழுதிப் புயலைக் கிளப்பியபடி இரண்டு புரவிகள் வேகமாக வந்து கொண்டிருந்தன.

அதைப் பார்த்த நம்பிராஜன் நம்பியின் கண்களில் திடீரென நம்பிக்கை ஒளி பிறந்தது.

“இதோ... ஈசன் அனுப்பிய சேவகர்கள் வந்துவிட்டார்கள்!”

என்று அவர் உரத்த குரலில் கூறினார்.

பின்னர் சேர அந்தணர்களை நோக்கி,

“சேவகர்கள் வந்துவிட்டார்கள். அவர்களிடம் காட்டுங்கள் உங்கள் வீரத்தை!”

என்றார்.

வந்த இருவரையும் கண்டவுடன் அங்கு இருந்த சேர அந்தணர்களின் முகங்களில் இருந்த ஆணவம் மறைந்து, அவர்கள் கதிகலங்கிப் போயினர்.

அந்த இரு புரவிகளில் வந்தவர்கள் யார்?

அதை அறிய...

அடுத்த திங்கள் வரை காத்திருங்கள்!


அந்த இருவர்கள் யார் என்று அடுத்த திங்கள் வரை காத்து இருங்கள்.