புதன், 14 ஜனவரி, 2015

காவியதலைவன்

காவியதலைவன்


பண்டைய காலத்தில் நாகரிகத்திலும், கலாசாரத்தில் சிறந்து வழங்கிய நமது இந்திய தேசத்தில் ஆண்ட மன்னர்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் இடம்பிடித்த தமிழ் மன்னன் ராஜராஜசோழன் என்கிற சோழ மன்னனை நாம் அனைவரும் அறிவோம்.

வரலாற்றில் இடம் பிடித்த அந்த மாபெரும் தலைவன் எப்படி அரியணை ஏறினான் என்பதை அறிந்தவர்கள் வெகு சிலரே,
அறியாத பலர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்த தலைவனின் காவியத்தை, காவியதலைவன் என்கிற தொடர் மூலம் அறிந்து கொள்வோம். வாருங்கள் தமிழர்களே, அறிந்து கொள்வோம் ராஜராஜ சோழன் அரியணை எப்படி ஏறினான் என்பதை இந்த தொடர் மூலம் காண்போம்.

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய "உடையார்" என்கிற வரலாற்று நாவலில் ராஜராஜசோழன் எப்படி அரியணை ஏறினான் என்ற சில பக்கங்களில் வழங்கி இருப்பார், அதில் ராஜராஜ சோழன் வழங்கிய மக்கதான தீர்பை கூறிப்பிட்டு இருப்பார்,
அந்த சம்பவங்களை கருவாக கொண்டு என் கற்பணையில் கொஞ்சம் விவரித்து இந்த தொடர் கதை எழுத இருக்கிறேன்....
reegan .ksr 

என்னுடைய இந்த புதிய முயற்ச்சிக்கு , என் எழுத்துகளுக்கு உருவம் கொடுக்க
இருப்பவர், இளம் ஒவியர் சகோதரர் ரீகன் . கே.எஸ்.ஆர்.
அவருடன் 
இணைந்து  என் கதை பயணிக்க இருக்கிறது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக