திங்கள், 20 ஏப்ரல், 2015

காவியத்தின்நாயகன் 2

அதிகாலை நேரத்தில் சிதம்பரத்தின்  மேற்கே  இருக்கும் காஞ்சி செல்லும்
பாதையில் ஒரு சிறிய படை புயலை போன்று வேகமாக சிதம்பரம் நோக்கி
வந்துகொண்டு இருந்தது, அந்த படையின் நடுநாயகமாக ஒரு சாம்பலும் வென்மையும்
கலந்த உயர்ரக அரபு நாட்டு குதிரையில் வரும் வீரன் தான், இந்த காவியத்தின்
நாயகன், ஆம் பிற்காலத்தில் தென் இந்தியாவை ஆண்ட ஸ்ரீ ராஜராஜ சோழன் என
வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்ட போகும் அருள்மொழிவர்மர் தான்
அக்குதிரை செலுத்தி கொண்டு இருந்தார்.

சுந்திர சோழரின் மகனான அருள்மொழிவர்மருக்கு, தன் தந்தைக்கு பிறகு கிடைக்க
இருந்த சோழ தேசத்து அரியணையை தன் சிறிய தந்தை உத்தம சோழருக்கு வீட்டு
கொடுத்து 14 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, மாமன்னர் உத்தமர் சோழரின்
கட்டளைக்கு கீழ் பணிந்து சோழ தேசத்தின் எல்லைகளை காக்கும் பொறுப்பை
கவணித்து கொண்டு, தனக்கு உள்ள இளவரசர் என்கிற பதவியின் அதிகாரத்தை
பயண்படுத்தி சோழ மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து மக்கள் மத்தியில்
மன்னராக திகழ்ந்தார் அருள்மொழி வர்மர்,
சோழ தேசத்தின் அரசனாக இல்லாவிட்டாலும், தனக்கு என்று ஒரு சிறிய
ராஜங்கத்தையே உருவாக்கி வைத்து இருந்தார் அருள்மொழி. அதில் ஒற்றர் படை
மூலம் சோழ தேசத்தை கண்காணித்து, போர் பாசறை மூலம் இளைஞர்களுக்கு போர்
பயிற்சி அளித்து கொண்டும்,  மக்களின் தேவையை கவணிக்க ஒரு துறையை
உருவாக்கி கொண்ட சோழ தேச மக்களிடம் தனி செல்வாக்கு பெற்றவராகவே
விளங்கிவிட்டார், காரணம் உத்தமர் சோழரின் அன்பிற்கு பாத்திரமானவர்
என்பதால் அருள்மொழியால் இது முடிந்தது.

காஞ்சியின் எல்லை பகுதியை பலப்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடு செய்துவிட்டு,
சிதம்பரம் வழியாக தச்சை செல்வதற்காக பயணிக்க அரம்பித்தார்.

அருள்மொழி வர்மருடன் சரிசமமாக கூட வரும் மாவீரரை பற்றி அறிமுகம்
உங்களுக்கு தேவை இல்லை(நீங்கள் பொன்னியன் செல்வன் நாவல் படித்து
இருந்தால்.) அருள்மொழிவர்மரின் அக்கா குந்தவைப்பிராட்டியின் கணவர்,
வல்லவராயன் வந்திய தேவன் தான் அது. சுந்திர சோழர் மறைவிற்கு பிறகு
ஏற்பட்ட குழப்பமான காலகட்டத்தில் தனது சாகசத்தால் தீர்வை ஏற்படுத்தி சோழ
தேசம் தற்பொழுது நிம்மதியூடன் வாழ காரணமானவர் தான் இந்த வந்திய தேவன்,
இவர்கள் இருவருடன் சிறிய மெய்காப்பாளர்கள் படையும் பின்தொடர்ந்து வந்தது.
சித்ம்பர எல்லையை நெருங்கிய உடன். அருள்மொழிவர்மர் வந்தியதேவருடன் பேச
அரம்பித்தார்.
"அன்பரே சிதம்பரத்தை நெருங்கிவிட்டோம், நடராஜனை தரிசித்து விட்டு நம்
பணியை கவணிக்கலாமா?"
"அப்படியே செய்யலாம் இளவரசே, கரும்பு சாப்பிடால் கச்காவா செய்யும்."

சிறிய புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, "அன்பரே என் சோகமாக இருக்கீங்க, என்
தமைக்கையை  வெகு நாள்களாக பிரிந்து வந்தாலா?"

"அப்படி எல்லாம் இல்லை இளவரசே!, குந்தவையை வீட்டு அணு அளவும் பிரிந்தது
இல்லை, அவள் என் இருதயத்தில் குடிஇருக்கும் பொழுது எப்படி பிரிவேன், என்
கவலை எல்லாம் சோழ தேசத்தை பற்றியும், உங்களை பற்றியும் தான் என் கவலை."

"இளவரசே மறந்துவீட்டீர்களா! தங்கள் தமைக்கையின் ஆசையை, தங்களை சோழ
தேசத்தின் அரியணை ஏற்றி வையகம் முழுவதும் தாங்கள் ஆள வேண்டும் என்பதே
அவளது ஆசை, அவளது கணவனான நான், என்று என் மனைவியின் ஆசை நிறைவேற்றுவேன்
என்கிற கவலை, வருங்கால சோழ தேசத்து அரசரை பெயர் சொல்லி அழைப்பது
முறையல்லவே, அதனால் தான் தங்கள் பெயர் சொல்லி அழைக்கவில்லை"

"நான் இவ்வையகத்தையே ஆண்டாலும், நீங்கள் என்றும் என் அன்பிற்கு
பாத்திரமானவர், தாங்கள் என்னை பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புகிறேன்,
நான் சோழ தேசத்தின் அரியனை ஏறுவது இயலாத காரியம், உத்தம சோழரின் மகன்
இருக்கும் பொழுது நான் எப்படி அரியனை ஏற முடியும்? சோழ தேசத்தின்
ஊழியனாகவே இருந்து மக்கள் பணி செய்வதிலே தற்பொழுது என் கவனம் இருக்கிறது"

"நாற்பதை நெருங்கிவிட்டீர், இன்னும் காலம் இருக்கிறது, தாங்கள்
விரும்பினால், இன்றே ஆட்சிமாற்றத்திற்கான காரியங்கள் செயல்படுத்த
அரம்பித்துவிடுவேன். தற்பொழுது என் ரகசிய படையில் நாற்பதாயிரம் இளம்
வீரர்கள் தங்கள் கீழ் போர் புரிய சித்தமாக உள்ளனர். தாங்கள் விரும்பினால்
இன்றே அரம்பித்துவிடுவேன்."

"வேண்டாம் அன்பரே, என் தமையன் ஆளாத இந்த தேசத்தை நான் ஆள வேண்டுமா?
வாருங்கள் நாம் இருவரும் ஆலயத்தில் ஈசனை தரிசித்துவிட்டு வருவோம்,"
தலைமை மெய்காப்பாளரின் சைகை மூலம் அழைத்து,"தாங்கள் பயணத்திற்கு தேவையான
ஏற்பாடை தயார் செய்துவிட்டு சத்திரற்கு வந்துவிடுங்கள். நாங்கள்
ஆலயத்திற்கு சென்று வந்துவிடுகிறோம்." என்று கூறிவிட்டு அருள்மொழி,
வந்தியதேவருடன் சிதம்பர நடராஜன் ஆலயத்தை நோக்கி தங்கள் புரவியை வேங்கை புலியை போன்று வேகமாக செலுத்த அரம்பித்தனர்.


சில நிமிடங்களிலே சிதம்பர மேற்கு வாயிலை நிழைந்த இருவரும் நடராஜன்
ஆலயத்தை நோக்கி தங்கள் புரவியை செலுத்தினர்.

"இளவரேசு ஆலயத்தில் வாசலில் என் மக்கள் கூட்டமாக நிற்கிறார்கள், நடராஜன்
ஆலயத்தின் வாயலில் என் இவ்வளவு கூட்டம், சேர அந்தனர்களுக்கு நடராஜன்
ஆலயத்தில் என்ன வேலை."

"தெரியவில்லை அன்பரே."
இவர்கள் இருவரது வருகையை கண்ட கும்பலாக வேடிக்கை பார்த்து கொண்டு
இருந்தவர் வழிவிட்டனர். அங்கு பஞ்சவன்மகாதேவியை நம்பிராஜன் நம்பி இருந்த
கோலத்தை பார்த்த வந்திய தேவரின் மனம் கோதித்தது, புரவியை விட்டு கீழே
குதித்த வந்திய தேவர் தன் உறை வாளை எடுத்தார் அதை கண்டு. பயந்து போய்
இருந்த சேர அந்ததனர்கள் அருகில் வந்து தன் போர் வாளை காட்டி, "யார்
செய்தது இந்த அவசெயலை, சைவம் தளைத்து வாழும் இந்த சோழ தேசத்தில், சைவ
மதத்தை பரப்பும் இப்பெரியவரை காயப்படுத்தியவன் எவன்டா, வீரனாய் இருந்தால்
என்னிடம் மோதி பார்," என்று கர்ஜிக்க

அருள்மொழியோ தன் புரவியை வீட்டு மெதுவாக இறங்கி தனது  உடம்பில் போற்றி
இருந்த செந்நிற போர்வையை சிறிது கிளத்து அந்த துணியை கொண்டு நம்பிராஜன்
நம்பியின் நெற்றியில் இருந்து வெளியான குருதியை துடைத்து, அதை கொண்டு
கட்டு போட்டு விட்டு சந்தமான குரலில், "பெரியவரே தங்களுக்கு என்னுடைய
பணிவான வணக்கம், தங்கள் நெற்றியில் ஏற்ப்பட்ட காயத்திற்கு யார் காரணம்?
இந்த பெண்னின் நிகழ்ந்தது என்ன?" என்று கூறி பஞ்சவன்மகாதேவியை முதன்
முதலாக அவளது முகத்தை பார்த்த போது, அருள்மொழிக்கு, அவனை அறியாமல்
பஞ்சவன்தேவியின் அழகு அவனது மனதை எதோ செய்தது,அவளிடம் பல ஆயிரம் வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தது போல உணர்வு அவனுக்கு ஏற்பட்டது, தன் இதயத்தை முதன் முதலாக பஞ்சவன் தேவியிடம் கைபற்றியதை உணர்ந்தான், தன் தமைக்காக அவளது தோழி வான்மகாதேவியை(வானதி) மணந்தையும், அவள் மூலம் முன்று குழந்தைகளுக்கள் உள்ளதையும் மறக்கடிக்க செய்தது விட்டது, இதே நிலை பஞ்சவன் தேவிக்கும் ஏற்பட்டது.

"எங்கள் சுந்தர சோழரின்  தவபுதல்வனே, பொன்னியன் செல்வனே, எங்களது அபிமான
"என்னிடம் எதற்கு மண்ணிப்பு கேட்கிறீர்கள், மண்ணிப்பு கேட்க வேண்டியது

இளவரசே, நம் ஈசனை துதிபாடிய திருஞான சம்பந்தரின் திருக்கடைக்காப்பு,
திருநாவுக்கரசரின் தேவாரம், சுந்தரின் திருப்பாட்டு, மாணிக்கவாசகரின்
திருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவையார் ஆகிய புன்னிய நூல்கள் இன்று
நடராஜன் ஆலயத்தில் உள்ள பொக்கிஷ அறையில் உள்ளது, அதை மீட்டு அதை
தொகுத்து, நம் சோழ தேசத்தில் உள்ள எல்லா சிவாலயங்களை அப்பாடல்களை பாட
வேண்டும் என்கிற ஆசையால், அதை மீட்க வந்தேன், அதை இங்கு உள்ள சேர
அந்தனர்கள் அதை தடுத்தார்கள் என்னை காயப்படுத்தி விட்டார்கள், என்னுடன்
போராடிய என் ஈசனின் மகளையும் அவமான படுத்திவிட்டார்கள் தகாத
வார்த்தைகளால். இந்த நம்பிராஜன் நம்பியின் ஆசையை தாங்கள் தான் நிறைவேற்ற
வேண்டும்" என்று நம்பிராஜன் நம்பி கூற இதை கேட்ட வந்திய தேவனின் கண்கள்
சிவந்தது.

அருள்மொழி நேராக வந்து,"ஆனையிடுங்கள் இளவரசே அவன் தலையை நடராஜனின் காலில்
சாய்க்கிறேன்"

"அமைதியாக இருங்கள் அன்பரே, நான் பார்த்து கொள்கிறேன்" என்று கூறி
நம்பிராஜனை கட்டி அனைத்து விட்டு, அவரை நோக்கி,"மகத்தான காரியத்தை
செய்துவிட்டீர்கள் நம்பிராஜனே, தாங்கள் காரியம் வெற்றி பெரும், அதற்கு
உறுதுணையாக நான் இருப்பேன்" என்று கூற நம்பிராஜன் நம்பிக்கு மகிழ்ச்சி
கடலுக்கே சென்றுவிட்டார்.

நம்மை எப்படி அருள்மொழி தண்டிப்பார் என்று கலக்கி போய் இருந்த சேர
அந்தனர், அருள்மொழி அமைதியாக இருப்பதை கண்டு பேசமுடியாமல் தலை குனிந்து
நின்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்த சிதம்பர ஆலயங்களை நிர்வாகிக்கும் சகாதேவன்
அய்யங்கார் ஆங்கு வேகமாக வந்து நடந்த சம்பவங்களுக்கு மண்ணிப்பு கேட்க.

இந்த பெரியவரிடமும், அந்த பெண்ணிடமும் தான். உங்கள் உறவுகள் செய்ததற்கு
நீங்கள் வெட்கபடவேண்டும்."

"ஆலயத்தின் பொக்கிஷ அறையில் இருக்கும், தெய்விக நூல்களை நம்பிராஜன்
நம்பியுடன் ஒப்படையுங்கள், சோழ தேசத்து இளவரசனின் உத்திரவு, வேண்டுமனால்
சோழ தேசத்து அரசரான உத்தம சோழரின் உத்தரவையும் வாங்கி தருகிறேன், அவரிடம்
இன்றே கொடுத்துவிடுங்கள்." என்று கம்பிர குரலில் கர்ஜிக்க.

அதை கேட்ட சகாதேவனுக்கு கதிகலங்க, சேர அந்தனர்கள் மத்தியில் சிலசிலப்பு
ஏற்பபட்டது,
இளவரசர் என்பதால் அவர் உத்தரவை மீற முடியாதே என்பதால்
சகாதேவன் பணிவாக தன் வார்த்தை பேச அரம்பித்தார்.
"மண்ணிக்கவும் இளவரசே, தாங்கள் சொன்ன காரியத்தை எங்களால் செய்ய முடியாது,
நீங்கள் கேட்கும் புனித நூல்களை திருநாவுகரசர், அப்பர், சுந்தர்
மாணிக்கவாசகர், ஒரு சேர்ந்து வந்தால் மட்டுமே, அவர்களிடம் மட்டுமே இந்த
புனித நூல்களை கொடுக்கமுடியும், தாங்கள் அந்த நால்வரை அழைத்து வாருங்கள்
பொக்கிஷ அறையின் சாவியை நாங்கள் தருகிறோம்" என்று கூறி ஏளனமாக
அருள்மொழியை பார்க்க.

வந்தியதேவருக்கோ அப்பதிலை கேட்டு சினம் உண்டாகி,"அந்த நால்வரும் எப்படி
வருவார்கள், சிவலோகம் சென்றவர்கள் வருவது எப்படி? இப்படி குதர்கமாக
பேசினால், உங்கள் நாவை இல்லாமல் செய்துவிடுவேன்."

"அன்பரே அமைதி காணுங்கள், இன்றே அந்த நான்கு அடிகளார்களை நாம் அழைத்து
வருவோம், புனித நூலை மீட்போம்" என்று கூறவிட்டு.

சேர அந்தனர்கள் மத்தியில் தன் கம்பிர குரலின்"சூரியன் வான் மத்தியில்
வருவதற்கு முன்பே, நீங்கள் கேட்ட அந்த நால்வரையும் அழைத்து வருகிறேன்,
பெக்கிஷ அறையின் சாவியை எடுத்து வையுங்கள். அன்பரே வாருங்கள் நாம்
அழைத்து வருவோம்." என்று கூறி வந்திய தேவரின் தோள் மேல் கை போட்டு
புரவியை நோக்கி நடை போட்டார்கள்.

காத்து இருங்கள் அடுத்த திங்கள் வரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக