புதன், 21 ஜனவரி, 2015

முற்கதை சுருக்கம்.

முற்கதை சுருக்கம்.


நாம் கதைக்குள் செல்வதற்கு முன், அந்த கதைகளத்திற்கு முன் நடந்த வரலாற்று கூறிப்புகளை அறிந்துகொள்வதன் மூலம் கதை களத்திற்கு எளிதில் பயணிக்கலாம்,கதைமாந்தகர்களை அறிமுகப்படுத்த வேண்டிய சிரமம் இருக்காது.

ராஜ ராஜ சோழன் என்கிற அருள் மொழி வர்மர் அரியணை ஏறுவதற்கு முன் நடந்த வரலாற்று சம்பவங்களை கொஞ்சம் பார்த்துவிட்டு கதைகளம் செல்வோம்.

கிபி 956 ஆண்டு காலகட்டத்தில் சோழ தேசத்தை மன்னனாக கண்டராதித்தர் இருந்து வந்தார். அரியணை மீது பற்று இல்லாதவராகவும், தீவிர சிவபக்கதரான இவர், தன் முதிய வயதில் செம்மியன் மகாதேவியை என்கிற சிவபக்தையை மனந்தார். அவர் மூலம் மதுராந்தகர் என்கிற ஆண் குழந்தை பிறந்தது, அந்த நேரத்தில் வடக்கே பலம் வாய்ந்த இராஷ்டிரகூடர்கள் தஞ்சை வரை முன்னேறி சோழர்களை தாக்கியதால், சோழர்கள் பலமிழந்து காணப்பட்டனர், ஆட்சியை சரியாக கவணிக்க முடியதால் சோழ தேசத்தில் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்கமுடியவில்லை, அந்த கவலையிலே தன் உயிரை விட்டார், கண்டராதித்தரின் மறைவுக்கு பின் அவரது தமையன்(தம்பி) அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தார்.


 வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த அரிஞ்சய சோழன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான். அரிஞ்சய சோழன் ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது.

கண்டராதித்தரின் மகன் மதுராந்தகர்(உத்தம சோழர்) சிறு வயது பாலகன் என்பதால், அவருக்கு பின் பலமிழந்த சோழ தேசத்தின் அரியணை ஏற வேண்டிய பொறுப்பு அரிஞ்சய சோழனின் மகன் சுந்திர சோழருக்கு ஏற்பட்டது.

கிபி 957ல் அரியணை ஏறிய சுந்திர சோழர் வலிமையான மன்னராகவும், பழவேட்டார்கள், வேள்ளாளர்கள், துணையுடன் தன் முன்னோர்கள் இழந்த சோழர் பகுதிகளை மீட்டு வலிமைமான சோழ தேசத்தை உருவாக்கினார். சுந்திர சோழருக்கு பக்கபலமாக அவரது மகன் அதித்ய கரிகாலன் துணை நின்றான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்.

தெற்கே திறை செலுத்த மறுத்து வந்த பாண்டிய நாட்டு மன்னன் வீரபாண்டியன் மீது படை எடுத்த சுந்திர சோழரின் மகன் ஆதித்த கரிகாலன், பாண்டியர்களை வென்று வீரபாண்டியனின் தலையை கொயந்து, 'பாண்டியன் தலைகொண்ட' மற்றும்  வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றான்., தன் தந்தைக்கும் சோழ தேசத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தான்..

கிபி 969ல் வீர பாண்டியனிடம் பிரம்மராயராக இருந்த ரவிதாசன் என்கிற சேர அந்தனர், வீரபாண்டியனை கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்வதற்கு சந்தர்பத்தை எதிர் நோக்கினார், அரியணைக்கு ஆசைப்படும் மதுராந்தகர் (உத்தம சோழரை) தன் திட்டத்திற்கு சாதகமாக பயண்படுத்தி கொண்டான் கடம்பூர் மாளிகையில் மர்மமான முறையில் "இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலனை " கொன்றார்கள்,

அதித்த கரிகாலன் மரணத்திற்கு பிறகு அவரது தம்பி அருள்மொழி வர்மர்(ராஜ ராஜ சோழனிற்கு) அரியணை ஏறும் வாய்பு கிடைத்தது, ஆனால் அதை ஏற்க மறுத்த அருள்மொழிவர்மர் தன் சிறிய தந்தையான மதுராந்தகர்(உத்தம சோழர்) அரியணை மீது நாட்டம் கொண்டதை அறிந்து அவருக்கே வீட்டு கொடுத்தார், தன் அண்ணன் மரணத்தில் உள்ள ரகசிய கண்டுபிடிக்கவும், வங்க கடலில் வணிக கப்பல்கள்களை கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களை அழிக்கவும், சோழ தேசத்தில் நிலவிய குழப்பான சூழ்நிலையை அகற்றவும், போன்ற இதிர காரணங்களால் உத்தம சோழருக்கு அரியணையை விட்டு கொடுத்தார், இதற்கு பக்கபலமாக அவரது நண்பர் வந்திய தேவன் இருந்தார் என்பது கூறிப்பிடக்கது.

கிபி 970ல் சுந்திர சோழருடன் இனைந்து அரியணை ஏறிய உத்தம சோழர், தலைமகன் அதித்த கரிகாலன் இழந்த இழப்பில் வாடிய சுந்திர சோழர் கிபி 973ல் மரணிக்க.
முழு சோழ தேசமும் உத்தம சோழரின் கட்டுபாட்டில் கீழ் வந்தது, அதுவரை பிரம்மராயராக(அமைச்சராக) இருந்த அநிருத்திரர் கிருஷ்ணராமன் அவர்களை வெளியேற்றி, பாண்டிய  மன்னன்  வீரபாண்டியனுக்கு பிரம்மராயராக இருந்த சேர அந்தனர் ரவிதாசனை நியாமிக்க, சேர அந்தனர்கள் பிடியில் மெல்ல மெல்ல சோழ தேசம் செல்ல அரம்பித்தது..

சீன தேசத்துடன் சோழ தேசம் கடல் வணிகம் செய்வதற்கு இடையூறாக இருந்த கடற்கொள்ளையர்களை அழிக்க சென்ற அருள்மொழி வர்மர், சில ஆண்டுகளிலே பல சாகசங்கள் செய்து அமைதியான கடல்
வணிகத்தை ஏற்படுத்தினார், அதை கண்டு மகிழ்ந்த உத்தமர் சோழர், அருள்மொழி வர்மர்க்கு இளவரசர் பட்டம் சூட்டி மகிழ்ந்தார், தனக்கு ராஜ்ஜியத்தை விட்டு கொடுத்தற்கு கைமாறாக அருள்மொழிக்கு சில அதிகாரங்களை வழங்கினார். பிரம்மராயராக இருக்கும் ரவிதாசனிடம் அருள்மொழி இனக்கமாக இருந்ததால், அவரும் உத்தமர் சோழரை  அருள்மொழிக்கு இளவரசர் பட்டம் சூட்டுவதை தடுக்கவில்லை.

சோழ தேச எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று கொண்ட அருள்மொழி வர்மர், சோழ தேச எல்லை பகுதிகளை பலப்படுத்தானார். தனக்கு கிடைத்த அதிகாரத்தை கொண்டு சோழ மக்களுக்கு பல உதவிகளை செய்தார், சோழ தேச மக்களின் அன்பை பெற அரம்பித்தார், தன் தமைக்கையின் கணவன் வந்தியதேவன் தலைமையில் ஒரு ரகசிய படையையும் தன் பயணத்தில் திரட்டி வந்தார். சோழ தேசம் முழுவதும் வலம் வந்து மக்கள் மத்தியில் மன்னராக இருந்தார்.

தன் தமையனின் மரணத்திற்கு காரணமானவர்களை ரகசியமாக தேடி கொண்டு இருந்த காலம் 16 வருடங்களாகியும் தன் அண்ணன் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கபடவில்லையே என்கிற வேதனையில் இருந்த காலம்.

அன்று அருள்மொழி தன் பயணத்தை சிதம்பரம் நோக்கி பயணிக்க அரம்பித்தார்

பெரும்பற்றப்புலியூர் என்று அழைக்கபட்ட தற்போதை சிதம்பரம் நகரம்
முழுவதும் சேர அந்தனர்களின் ஆன்மிக நகரமாக உத்தமர் சோழர் காலத்தில்
விளங்கியது, சைவம் தளர்ந்து, வைணவம் வளர்ந்த வந்தார்கள் சேர அந்தனர்கள். 

நம் கதைகளம் செல்ல போகும் காலமும் அதே கிபி985 ஆண்டு
பெரும்பற்றப்புலியூர் என்ற அழைக்கப்பட்ட ஆன்மிக நகரமான சிதம்பரத்தில்
இருந்தே நம் கதை களத்திற்கு செல்லப்போகிறோம்.

வாருங்கள் நாமும் பயணிப்போம் தில்லையில் நடனம் ஆடிய சிதம்பரத்தை நோக்கி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக