திங்கள், 27 ஏப்ரல், 2015

காவியத்தின்நாயகன் 3

தன் தமைக்கையின் கணவர் வந்தியதேவனை அழைத்து கொண்டு இளவரசர் அருள்மொழி தன்
தந்தை சுந்தர சோழர் கட்டிய சிறிய அரண்மனை இருக்கும் சிதம்பர கிழக்கு
பகுதியை நோக்கி நடக்க அரம்பித்தார், வெகு நாள்களுக்கு பிறகு இளவரசரை கண்ட
மகிழ்ச்சியில் சிதம்பர மக்கள் ஆரவார கோஷங்களை முழங்கி அருள்மொழியை
பின்தொடர்ந்து நடக்க அரம்பித்தனர், அவர்களுடன் நம்பிராஜன் நம்பியூம்,
பஞ்சவன்மகாதேவியும் சென்றனர், சேர அந்தனர்களை தவிர்த்து அனைவரும் செல்ல,
நடராஜன் ஆலயத்தின் வாயில் முன் இருந்த சகாதேவனை சுற்றி சேர அந்தனர்
சூழ்ந்துகொண்டனர்.

வயதான சேர அந்தனர் சகாதேவன் முன் வந்து சமஸ்கிருதத்தில் பேச
அரம்பித்தார், அந்தனர்களை தவிர வேறு யாருக்கு தெரிய கூடாது என்பதற்காக
சமஸ்கிருதத்தில் பேசுவது அந்தனர்களில் வாடிக்கையான செயல்களில்
ஒன்று,"சகாதேவா! எதற்காக இளவரசரை கண்டு நடுங்கிறாய்? இந்த சோழ தேசத்தை
தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கும் நம் தலைவர் ரவிதாசன் இருக்கும்
பொழுது, அருள்மொழியிடம் அமைதி காத்துபோவது சரியல்ல"

"பெரியவரே பொறுங்கள், நாம் அந்தனர்கள்!, எதையும் ஞானத்துடன்
செயல்படுவர்கள்! நாம், நம் தலைவர் ரவிதாசன் இந்த சோழ தேசத்து பிரம்மராயராக
(முதலமைச்சர்) இருக்கலாம், ஆனால் வந்து இருப்பது அருள்மொழிவர்மர், இளவரசர்
பட்டம் சூட்டப்பட்டவர், உத்தம சோழரிடம் அன்பை பெற்றவர், கடற்கொள்ளையர்களை அழித்து வங்கடலில் வணிகத்தை மேம்படுத்தியவர், சோழ தேசத்து மக்களின் அன்பை சம்பாதித்தவர், அவரிடம் கவனமாகவேசெயல்படவேண்டும், என்பதை சிந்தித்து பாருங்கள், நீங்களே  அறிவிர்கள்?"

சகாதேவனின் இளைய மகன் இந்திரன் தன் தந்தையிடம், "தந்தையே! புலியையே கொன்ற
இனம், நம் இனம். அருள்மொழி நம்மை எதிர்த்தால், அவன் தமையனை எமலோகம்
அனுப்பியது போல அவனையும் அனுப்பிவிடுவோம்." என்று கூறிமுடிப்பதற்குள்,
இந்திரன் கண்ணத்தில் பிளார் என்று அறைந்தான் சகாதேவன்  "முடனே! நாவை
அடக்கு, நீ பேசிய விடயம் சோழர்களில் செவியில் விழுந்தாள், நம் உயிரை
எடுத்துவிடுவார்கள்."

கண்ணத்தை தடவிகொண்டு, "நான் சமஸ்கிருதத்தில் தானே பேசினேன், நான்
பேசியது, நம்மை தவிர யாருக்கு தெரியபோகிறது."

"நாம் இருப்பது சோழ தேசம், கல்களுக்கு கூட செவி உண்டு, நாம் பேசும் உடல்
அசைவிலே உணர்ந்து விடக்கூடியவர்கள், அவர்களுக்கு மட்டும் அந்த ரகசியம்
தெரிந்தால், நம் உடலில் உயிர் இருக்காது" என்று தன் அதங்கத்தை சகாதேவன்
வெளிப்படுத்த, இவர்கள் பேசி கொண்டு இருப்பதை தூரத்தில் இருக்கும் பெரிய
அலமரத்தின் கிளைகள் அடர்த்தியில் மறைந்து இருக்கும் ஒரு இளைஞன்
கண்காணித்து கொண்டு இருந்தான்.

இளவரசர் வந்து இருப்பதை அறிந்து அரண்மனையில் உள்ள பணியாளர்கள் தடபுடலான
விருந்தை ஏற்பாடு செய்ய, பயண களைப்பில் இருந்த இளவரசர் அருள்மொழியும்,
வந்திய தேவரும் அவர்களுடன் வந்த வீரர்களுக்கும், அடிகளார் நம்பிராஜனும்
அமர்ந்து அறுசுவை உணவுகளை உண்டு தங்கள் பசியை தீர்த்து கொண்டனர், ஆனால்
வந்திய தேவர் காலையில் நடந்த சம்பவத்தால் வருத்ததுடன் இருப்பதை அறிந்து
அருள்மொழி பேச அரம்பித்தார்,"என்ன அன்பரே, உங்களுக்கு இன்னும் என் மீது உள்ள கோபம் தீர வில்லை போலும்?"

"உங்கள் மீது நான் எப்படி கோப பட முடியும்?" என்று சொல்லி வந்திய தேவர்
தன் முகத்தை திருப்பி கொள்ள,

"அன்பரே, நான் செய்கின்ற ஒவ்வொறு காரியத்திலும், ஓர் அர்த்தம் இருக்கும்,
நீங்கள் பழைய வந்திய தேவராக இருந்து இருந்தால், உணர்ந்து இருப்பீர்கள்,
என்று என் தமைக்கை கரம் பிடித்தீர்களோ? அன்றே உங்கள் இதயத்தை மட்டும்
அல்லாமல், ஞானத்தையும் இழந்துவிட்டீர்கள்."

"என் குந்தவை மீது குறை சொல்லாமல், உங்களால் இருக்க முடியாத அருள்மொழி?,
அவள் என் மனைவி மட்டும் அல்ல, எனது உடலை இயக்கும் உயீர்"

"ஆகா, அற்புதம், அனந்தம், என் மனம் குளிர்ந்து விட்டது"

"எதற்காக அனந்தப் படுகிறீர்கள் இளவரசே, உங்கள் தமைக்கை குந்தவை மீது
நீங்கள் வைத்து இருக்கும் பாசத்தை விட குறைவு தான் என் மனைவி மீது நான்
வைத்து இருக்கும் அன்பு, இதை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன்."

"அன்பரே, நான் அதற்காக அனந்தப்படவில்லை, தங்கள் இருவரும் இந்த சோழ
தேசத்தின் வளர்ச்சி மீது தான் காதல் கொண்டவர்கள், ஒரே கொள்கை உடையவராக
இருந்த காரணத்தாலே இனைந்தீர்கள், நான் மகிழ்ச்சி அடைய காரணம், தாங்கள்
என் பெயர் சொல்லி அழைத்தாலே அனந்தப்பட்டேன், தாங்கள் என் பெயர் சொல்லி
அழைத்து வெகு காலம் ஆகிவிட்டது.நான் இந்த வையகத்தில் அதிகம் நேசிப்பது, என் இனிய நண்பரான தங்களையும், என் உயிரினும் மேலான என் தமைக்கையான குந்தவையை தான், நான் இந்த வையகத்திற்கே அரசனாக ஆனாலும், தங்களுக்கு என்றுமே அருள்மொழி தான்." என்று கூறி வந்திய தேவரை கட்டி தழுவ இருவரது கண்களில் கண்ணீர் வடிய, இவர்களது அன்பையும், நட்பையும் கண்டு சிதம்பர மக்கள் மெய்மறந்து பார்த்தனர்.

"தங்கள் நட்பால் வானவர் குலமே பெருமை அடைந்துள்ளது, என் இனிய நண்பரே
எதற்காக சேர அந்தனர்களை தண்டிக்காமல் வீட்டீர்கள், சிவலோகம் பதவி அடைந்த
நான்கு அடிகளாரை எப்படி அழைத்து வரமுடியும்?"

"அன்பரே! காரியத்திலே கண்ணாக இருக்கீறீர்களே? சேர அந்தனர்களிடம் மிகவும்
கவணமாகவே இருக்க வேண்டும் என்பதை தாங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம்
இல்லை, பிரம்மராயராக(முதன்மை அமைச்சராக) இருக்கும் ரவிதாசனை பற்றி என்னை
விட உங்களுக்கே நன்கு தெரியும்,

முயன்றால் முடியாது என்கிற வார்த்தைகளே கிடையாது. சைவ மதத்தின் புகழை
பரப்பிய அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், திருவாசகருக்கு மரணமே என்றுமே
கிடையாது." என்று கூறி வந்திய தேவரின் காதில் அருள்மொழி ரகசியமாக சில
வார்த்தைகள் கூற வந்திய தேவரின் முகம் அனந்ததில் முகம் மலர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக